19 வயதிற்குட்பட்ட உலக கிண்ணம் : 5 ஆவது தடவையாக கிண்ணத்தை வென்றது இந்தியா!

19 வயதிற்குட்பட்ட உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட்களால் வீழ்த்தி இந்திய அணி கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 44.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து 190 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி 47.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை மாத்திரமே இழந்து இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இந்த வெற்றியை அடுத்து இந்திய இளையோர் அணி 5 ஆவது தடவையாக 19 வயதிற்குட்பட்ட உலக கிண்ணத்தை வென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *