டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக மெட்வெடேவ் அறிவிப்பு !

உலக டென்னிஸ் தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள ரஷ்யாவை சேர்ந்த முன்னணி வீரர் டேனியல் மெட்வெடேவ், டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் அவுஸ்ரேலிய ஓபனை இறுதிப் போட்டியில் தவறவிட்ட டென்னிஸ் நட்சத்திரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

போர்மியுலா-1 கார் பந்தயத்துக்கான பயிற்சியை தொடங்கி இருப்பதால் தாம் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுதாக கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் உலகின் முதல் நிலை வீரரான நோவெக் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *