
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வின் அணிவகுப்பின் போது, இலங்கையின் போர் வீரர்கள் தாங்கிய இராணுவ மிதவையில், விடுதலைப் புலிகளின் போராளிகளின் புகைப்படம் அலங்கரிக்கப்பட்டதை அடுத்து குறித்த சம்பவம் அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த வீரர்களை ஏற்றிச் சென்ற, குறித்த மிதவையில் உள்ள இரண்டாவது புகைப்படம், போர்க்களத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் கமாண்டோக்களின் புகைப்படத்தை குறிக்கிறது என தெரியவருகிறது.
குறித்த புகைப்படம் பொறிக்கப்பட்ட மிதவையே சுதந்திர அணி வகுப்பில் பயன்படுத்தப்படுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி வன்னேரிக்குளத்தில் இடம்பெற்ற போரில் இருந்து, இலங்கை இராணுவத்துடன் கடுமையான மோதல் நடைபெற்ற நேரத்தில், புலிகளால் குறித்த புகைப்படம் வெளியிடப்பட்டது.
அத்துடன் இலங்கை இராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறித்த புகைப்படம் தற்போதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த தகவல்களை உள்ளடக்கிய செய்தி ஒன்றை வுயஅடை புரயசனயைn ஊடகம் தற்போது வெளியிட்டுள்ளது.