
கொழும்பு – பொரள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சஹஸ்புர தொடர்மாடி குடியிருப்பின் மேல்மாடியிலிருந்து கீழே விழுந்து நபரொருவர் நேற்று உயிரிழந்தார்.
பொரளை பிரதேசத்தை சேர்ந்த 31 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
பிரேதப் பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.