தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம்

தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் நாளை இரவில் இருந்து சிறிய மாற்றம் ஏற்படும் என  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று தொடர்ச்சியாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *