ஒமிக்ரான் திரிபின் மற்றுமொரு உபதிரிபு இனங்காணப்பட்டுள்ளது!

ஒமிக்ரான் திரிபின் தாக்கம் உலகளாவிய ரீதியில், அதிகரித்து தொற்று பரவலை தீவிரமாக்கி வரும் நிலையில், இதன் புதிய உப திரிபு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

இதுவரையில் பரவிய நோயாளர்களிற்கு ஒமிக்ரான் திரிபின் BA.1 வகை உப திரிபின் தாக்கமே அதிகம் இனங்காணப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது BA. 2 எனும் புதிய வகை உபதிரிபின் தாக்கம் அதிகமாகி வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது BA. 1 வகையை விட அதிக தொற்றும் தன்மை கொண்டது எனவும் அறியப்பட்டுள்ளது.

ஜனவரி 31ஆம் திகதி வரையில் 96.4 வீதமான மக்களிற்கு BA. 1 திரிபின் தாக்கம் பதிவாகியிருந்தது.

இதன் பின் BA. 2 திரிபுகள் தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக இனங்காணப்பட்டுள்ளன.

இப்போது மொத்தம் 57 நாடுகளில் இந்த புதிய திரிபுகள் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக டென்மார்க்கில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் அமெரிக்கா, கனடா, பிலிபைன்ஸ், நோர்வே ஆகிய நாடுகளிலும் இந்த திரிபு இனங்காணப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *