
எம்பிலிபிட்டி − பணாமுர பகுதியில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரு சகோதரர்களுக்கு இடையிலேயே, இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட நபரின் குழந்தையை, சந்தேகநபரின் வீட்டிலுள்ள நாய் கடித்துள்ளது.
இந்த நிலையில், ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, சந்தேகநபரின் மனைவி மீது கொலை செய்யப்பட்ட நபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதையடுத்தே, இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த சந்தேகநபரின் மனைவி, எம்பிலிபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் எம்பிலிபிட்டி பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
27 வயதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பணாமுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.