மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் உதவுவதற்காக நிதி அமைச்சின் கீழ் நிறுவன மறுசீரமைப்பு அலகு ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட், ஸ்ரீ லங்கன் கேட்டரிங் லிமிடெட், ஸ்ரீலங்கா டெலிகொம் பி.எல்.சி மற்றும் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளன.
இந்தநிலையில் அரச நிறுவனங்களில் ஆழமான பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தகைய சீர்திருத்தங்கள் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.