வெசாக் தினத்திற்காக இராணுவத்தினர் துரிதகதி – அலங்கார பௌத்த சின்ன கொடிகள் மற்றும் வெசாக் தோரண பந்தல்கள் அமைப்பு! samugammedia

சிங்கள மக்களால் நாளையதினம் புனித முழுமதி பௌர்ணமி செவாக்  தினத்தினை முன்னிட்டு இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்துபௌத்த விகாரைகளிலும் மற்றும் பாதுகாப்பு படைத்தலைமைய பிரிவுகளின் அமைவிடங்களிலும் பௌத்தசின்னகொடிகள் மற்றும்  வெசாக் தோரணபந்தல்களை அலங்கரிக்கும் பணிகளை யாழ். மாவட்ட பாதுகாப்பு படைத்தலைமைய இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

இவ் புனித நிகழ்வினை முன்னிட்டு யாழ். ஸ்ரீ நாகவிகாரை மத்தியஸ்தான விகாரையிலும் மற்றும் யாழ். நகர்புற இராணுவ பாதுகாப்பு படைப்புரிவுகளில் உள்ள பாதுகாப்பு வேலிகளிலும் பௌத்தசின்ன கொடிகள் மற்றும்  வெசாக் தோரண பந்தல்களை இராணுவத்தினர் மிக ஆர்வத்துடன் அமைத்து வருவதை காணமுடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *