சிறி சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல் நிகழ்வு !

தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல் நிகழ்வு இன்று(06) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

கோண்டாவில் அன்னங்கை பகுதியில் காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வின் போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு சிறி சபாரத்தினத்தின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவேந்தலில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.,செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் எம்.பி. ரெலோவின் பேச்சாளர் கு.சுரேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சபா.குகதாஸ், விந்தன் கனகரட்ணம், பிரசன்னா இந்திரகுமார் வலிகிழக்கு முன்னாள் தவிசாளர் தி.நிரோஷ் உள்ளிட்ட ரெலோவின் உறுப்பினர்கள், மூத்த போராளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலயத்தில் மாவட்ட அமைப்பாளர் எ.ரி.மோகன் ராஜ் தலைமையில் நினைவஞ்சலி நிகழ்வு நடை பெற்றது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ரெலோ கட்சியின் முக்கிய உறுப்பினர்கள்,ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ்,கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன் போது தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் உயிர் நீத்த போராளிகள் பொதுமக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *