எரிபொருள் கோட்டா, விலை திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..! samugammedia

அடுத்த மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீடு இரு மடங்காக அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த 7 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீட்டை அடுத்த மாதம் எரிபொருள் விலைத் திருத்தத்தின் போது 14 லீற்றராக அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், எரிபொருள் விலை திருத்தத்துடன் எரிபொருள் ஒதுக்கீட்டு திருத்தமும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர்  இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *