அனுராதபுரத்தில் கஞ்சாவை கைமாற்ற முயன்ற மூவர் பொலிசாரால் கைது! samugammedia

யாழிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட கஞ்சாவை அனுராதபுரத்தில் வைத்து கைமாற்ற முற்பட்டவேளை சந்தேக நபர்கள் மூவர் இன்று பொலிசாரல் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாண புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இன்று அனுராதபுரம் பராக்கிரம்புர, பதவியா பகுதியில் உள்ள ஒரு கடையில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்ற மூவரை பொலிசார் சோதனை செய்துள்ளனர். 

இதன்போது காஞ்சாவை உடமையில் வைத்திருந்த  மூவரும் ஶ்ரீபுர பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

அவர்களிடம் இருந்து 4.5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *