தகவல் அறியும் உரிமை சட்ட மூலம் ஊடாக எமது உரிமையைப் பாதுகாப்போம் ' எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு செயலமர்வு! samugammedia

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்ப்பாட்டில்  தகவல் அறியும் உரிமை சட்ட மூலம் ஊடாக எமது உரிமையைப் பாதுகாப்போம் ‘ எனும்  கருப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களுக்கான இரண்டாம் கட்ட செயலமர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (18) மட்டக்களப்பிலுள்ள ஈஸ்ட் லகூன் தனியார் விடுதியில் நடைபெற்றது.

இச்செயலமர்வில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தகவல் அறியும் உரிமை சட்ட திட்ட  உதவியாளர் ஆர்த்தி ரவிவர்மன்,  விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் முகமட் பைரூஸ் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

தகவல் அறியும் சட்டம், இலங்கை பிரஜைகள் அனைவருக்கும் பொதுவானது ஊடகவியலாளர்களுக்கும் சிவில் சமூக அமைப்பினருக்கும் சட்டத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் முகமாகவே இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த செயலமர்வில் ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *