ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணையாமல் எந்தவொரு கூட்டணியாலும் தேர்தலில் வெற்றிபெறமுடியாதென கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார்.
தேவையேற்படின் கட்சிகள் எம்முடன் இணைந்து கூட்டணி அமைக்கலாம். அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவே பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு வாக்களித்தனர்.
அரசியல் கட்சி என்ற ரீதியில் எமக்கு ஒரு கொள்கை இருந்தது. மக்கள் அந்தக் கொள்கையை ஏற்று எமக்கு ஆணையை வழங்கினர்.
மாகாண சபைகள், பிரதேச சபைகள், பொதுத் தேர்தல்கள், ஜனாதிபதித் தேர்தல்கள் போன்றவற்றுக்கு முகம் கொடுக்கக்கூடிய பலமான அரசியல் கட்சியாக நாம் மாறியுள்ளோம்.
அதன் பலனாக கட்சி ஸ்தாபிக்கப்பட்டு 02 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில்,
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றோம். வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளோம்.
69 இலட்சம் மக்கள் ஆணை வழங்கிய, ஜனாதிபதியை நியமித்தோம்.
