நெடுந்தீவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் முன்னெடுப்பு!

யாழ். நெடுந்தீவு பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று காலை நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியது.

நெடுந்தீவு பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்தலில் ஆரம்பமான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், பிரதேசத்தின் கடல் போக்குவரத்து சுற்றுலாத்துறை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

மேலும் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் சேவைத்துறை சார்ந்த முன்னேற்றங்கள், அவற்றின் தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.

குறிப்பாக சுகாதாரம், கல்வி, வீட்டுத்திட்டம், உள்ளூராட்சி, கூட்டுறவு, நீர்வழங்கல், மின்சாரம்,போக்குவரத்து, சமுர்த்தி, விவசாயம், நீர்ப்பாசணம், வாழ்வாதாரம், மீன்பிடி, வீதி புனரமைப்பு காணிஉள்ளிட்ட பல்வேறு துறைகள் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் , நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *