கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட்நியூஸ்..! இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை இலவசமாகப் பார்வையிட ரசிகர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் இன்றையதினம்(16)ஆரம்பமாகவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி,காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் எஸ்.எஸ்.சி. இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் ரசிகர்கள் மைதானத்தில் இலவசமாக பார்வையிடலாம் என கூறப்பட்டுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி எஸ்.எஸ்.சி.மைதானத்தில் இம்மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *