நாட்டு மக்களுக்கு மின்சாரத்தைப் பெற்றுக்கொடுக்க முடியாத அரசே ஆட்சியில் உள்ளது!

நாட்டு மக்களுக்கு மின்சாரத்தையும் எரிவாயுவையும் பெற்றுக்கொடுக்க முடியாத அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் நாடு எங்கு பயணிக்கின்றது என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்த வேண்டும்.

அரசாங்கம் தற்போது செயற்படுவதை போன்று தொடர்ந்து செயற்படுமாயின் மிகவும் மோசமான ஒரு யுகமே நாட்டில் உருவாகும்.

உண்மையை கூறினால் நாட்டு மக்களுக்கு மின்சாரத்தை, எரிவாயுவை பெற்றுக்கொடுக்க முடியாத அரசாங்கமே தற்போது உள்ளது.

வாழ்வாதார செலவீனங்களை காட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாத ஒரு அரசாங்கமாக இந்த அரசாங்கம் உள்ளது.

அரசாங்கம் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் எவ்விதத் திட்டங்களும் இன்றி செயற்படுவதன் காரணமாகவே நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களை காணமுடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *