
புத்தளம் – கற்பிட்டி, தலவில பகுதியில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற இயந்திர படகு ஒன்று, கடற்படை ரோந்து கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கற்பிட்டி, தலவில கடற்கரையிலிருந்து இன்று மீன்பிடித் தொழிலுக்காக சென்ற இயந்திர படகு ஒன்றே இவ்வாறு சேதமடைந்துள்ளது.
குறித்த இயந்திர படகில் பயணித்த, அந்த படகின் உரிமையாளரான தலவில கொலனி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய மீனவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த குறித்த மீனவர் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சேதமடைந்த குறித்த மீன்பிடி இயந்திர படகிற்கு சுமார் 3 இலட்சம் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.