யாழ். குடாநாட்டில் போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்யும் நடவடிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
மதுவரித்திணைக்களத்தினர், பொலிசார், இராணுவத்தினர் இணைந்து குறித்த நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளனர்.
அந்த வகையில் கடந்த 3 நாட்களில் 10 க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் தற்போது இராணுவத்தினர் மும்முரமாக செயற்படுகின்றனர். இராணுவத்தினருக்கு கிடைக்கும் புலனாய்வு தகவலின் அடிப்படையில் கஞ்சா வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்றும் செம்மணி மற்றும் நாவாந்துறை பகுதியில் இருவர் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.