
வவுனியா-அநுராதபுரத்துக்கு இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளது.
ரயில் பொது முகாமையாளர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் மார்க்கங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 5 மாதங்களுக்கு ரயில் சேவைகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.