முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒதியமலை கிராமத்தில் யானை ஒன்று மின்சாரவேலியில் சிக்கி உயிரிழந்தது.
தோட்டம் ஒன்றிற்கு கட்டப்பட்ட மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்தது.
வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டுள்ளதுடன் ஒட்டுசுட்டான் பொலிஸாரும் விசாரணை நடத்தினர்.
இதன்போது தோட்டக் காணியின் உரிமையாளரான 46 வயதுடை பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், யானை உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
மின்சார வேலியில் தும்பிக்கையினை பிடித்தபடி யானை உயிரிழந்தது.