மத்துகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத இருவர் கைத்துப்பாக்கியுடன் வீடொன்றுக்குள் நுழைந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில், குறித்த பெண் உயிரிழந்தார்.
பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.