
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கையை இலங்கை கத்தோலிக்க திருச்சபை வத்திக்கானுடன் இணைந்து மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஏற்பாடு செய்து வருவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இலங்கை கத்தோலிக்க திருச்சபை வத்திக்கானுடன் இணைந்து ஒரு நடவடிக்கையை ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் அது பற்றி நாங்கள் இப்போது எதையும் வெளியிட மாட்டோம்
ஈஸ்டர் ஞாயிறு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க தேவாலயம் சர்வதேச உதவியை நாடினால், இலங்கை அனுபவிக்க வேண்டிய விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தமைக்காக செஹான் சானக கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்தினால் அது கிட்டத்தட்ட ஒரு கடத்தல் என சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.