யாழில் எழில் மிகு கிராமம் வேலைத்திட்டம் ஆரம்பம்!

யாழில் ‘எழில் மிகு கிராமம்’ வேலைத்திட்டம் வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சால் எதிர்வரும் தினங்களில் ஆரம்பமாகும் என வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் நளாயினி இன்பராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கைதடியில் அமைந்துள்ள உள்ளுராட்சி அமைச்சின் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நளாயினி இன்பராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘எழில் மிகு கிராமம் வளமான வாழ்வு’ எனும் தொனிப்பொருளிலே ஜனாதிபதியின் கொள்கைக்கு அமைவாகவும் வடக்கு மாகாண ஆளுநரின் வழிகாட்டுதலுக்கு அமைவாகவும் உள்ளூராட்சி அமைச்சு அதற்குக் கீழுள்ள திணைக்களங்களும் பங்குதாரர்களும் அனுசரணையாளர்களும் இணைந்து செயற்;படுத்துகின்ற முதலாவது செயற்றிட்டமாக இருக்கின்றது.

காங்கேசன்துறை வீதியில் இருந்து ஆரம்பித்து செம்மணி வீதி வரை முடிவடைகின்ற 4.12 கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான கல்வியங்காடு கொக்குவில் ஆடியபாதம் வீதியை தூய்மைப்படுத்துதலும் பாதசாரிகளின் உடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தலும் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் உங்களுடைய இந்த செயற்றிட்டத்தின் உடைய முதலாவது செயற்பாடாக காணப்படுகின்றது.

இது முதலாவது செயல் திட்டமாக அமைகின்றது. இதனுடைய ஆரம்ப கட்டமானது கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் முன்றலில் வைபவ ரீதியாக எங்களது குழுவின் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனுடைய தொடர்ச்சியான தன்மை அந்தந்த திணைக்களங்களின் ஆளும் அப்பகுதியில் வாழ்கின்ற பொதுமக்களின் தொடர்ச்சியாக பெறப்படும் என்பதனை கூறிக் கொள்கின்றேன்.

இவ் இணை ஊடக சந்திப்பில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வடமாகாண பணிப்பாளர் பொறியிலாளர் சிவநேசன், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் ஆகியோரும் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *