
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதி திருமணக்கோலத்தில் இருக்கும் வித்தியாசமான போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாட்டுப்புற கலைஞர்களாக பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடல் பாடி மக்கள் மத்தியில் பிரபலமான தம்பதி செந்தில்கணேஷ’ ராஜலட்சுமி. அதன்பிறகு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்களாக பங்கேற்று பிரபலமான இவர்கள் தற்போது திரைப்பட பின்னணி பாடகர்களாக வலம் வருகினறனர். இவர்கள் மேடை நிகழ்ச்சிகளில் பாடிய சின்ன மச்சான் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
‘அதேபோல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி பாடிய பாடல்கள் வைரலாக பரவியது. இதில் செந்தில் கணேஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட ராஜலட்சுமி, தான் பாடும் அனைத்து பாடல்களும் தனது கணவரை மனதில் வைத்துதான் பாடுகிறேன் என்று பலமுறை மேடை நிகழ்ச்சிகளிலேயே கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற வாயா சாமி பாடலை பாடிய ராஜலட்சுமி தனது கணவரை மனதில் வைத்து பாடியதாக கூறியிருந்தார்.
பாடகர்களாக பிரபலமான இவர்கள் சிறிதாக செய்யும் ஒரு சில செயல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருவது தொடர்ந்து வருகிறது. இந்த வகையில் தற்போது இவர்கள் மணக்கோலத்தில் நடத்திய போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. காதலர் தினம் முடிந்தும் இவர்கள் காதல் அலை தொடர்ந்து கொண்டிருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றன.
பாடல் மட்டுமல்லாது டிவி ரியாலிட்டி ஷோக்களிலும், பங்கேற்று வரும் செந்தில் கணேஷ் சமீபத்தில் தனது அம்மாவுடன் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். மேலும் இவர் தனது மனைவி ராஜலட்சுமியுடன் இணைந்து ஒரு சில சீரியல்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் அடிக்கடி போட்டோஷூட் எடுப்பதை தங்களது வழக்கமாக வைத்துள்ளது போல் தற்போது செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியும் போட்டோஷூட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர்
அந்த வகையில் தற்போது மணக்கோலத்தில் இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், இந்த போட்டோக்களுக்கு அவர்கள் கொண்டுத்துள்ள கேப்ஷன்களையும் கருத்துககள் மூலம் ரசிகர்கள் பாராட்டி வருகினறனர்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.