
கொக்மாடுவ வெலிகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சார்பாக போலி தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி 2021 க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய சந்தேகத்தின் பேரில் புத்தளம் புனித மரியாள் தமிழ் கல்லூரியில் மற்றுமொரு பிக்கு ஒருவரை புத்தளம் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
புத்தளம் புனித மரியாள் தமிழ் கல்லூரியின் பரீட்சை மண்டபத்தில் நான்காம் நாள் க.பொ.த உயர்தர சிங்களப் பாட வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு ஆஜரான போது, பரீட்சை மண்டபத்தின் தலைமை ஆசிரியர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த பிக்கு கைது செய்யப்பட்டார்.
மஹஹில்ல இசுருபுர, பேலுரத்த பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றைச் சேர்ந்த பிக்கு ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பிக்குவை புத்தளம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.