
புத்தளம், பெப் 16: புத்தளம் பகுதியில், வீடொன்றில் தீக்காயங்களுடன் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் புத்தளம் – அனுராதபுரம் வீதியைச் சேர்ந்த 36 வயதான மரிக்கார் முஸ்வத்துல் யஹால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் தனது காதலருடன் வசித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில் “குறித்த பெண்ணின் கணவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அப்பெண் தனது காதலருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், புதன்கிழமை மாலை அவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதாக அவரது காதலர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, அந்தப் பெண்ணின் காதலரை கைது செய்துள்ளோம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.