
யாழ்ப்பாணம், பெப் 16: சுகாதாரப் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால், யாழ். போதனா வைத்திய சாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த ஆர்டி- பிசிஆர் கொரோனா சோதனை புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.
சுகாதார பணியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, வெளிநாடு செல்வோருக்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் கடந்த வாரம் இடைநிறுத்தப்பட்டன.
சுகாதார பணியாளர்கள் புதன்கிழமை முதல் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ள நிலையில், இன்று முதல் வெளிநாடு செல்வோருக்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள்மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நந்தகுமாரன் தெரிவித்தார்.