
கொழும்பு, பெப். 16: பெட்ரோலிய கூட்டுத்தாபனதுக்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்படலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க கூறியது: தற்போதைய சூழலில் பிப்ரவரியில் சுமார் ரூ.11 பில்லியன் நட்டம் ஏற்படும். எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் அல்லது எரிபொருளுக்கான வரிச்சலுகைகளை வழங்க வேண்டும் என நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
தற்போதைய சூழலில் எரிபொருட்களின் விலை தொடர்ந்தும் இவ்வாறு பேணப்படுமாயின், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பாரிய நட்டத்தை எதிர்நோக்க வேண்டியேற்படும் என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக, எரிசக்தி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில் “டொலர் பற்றாக்குறையினால் எதிர்காலத்தில் நாட்டின் எரிபொருள் விநியோகம் நெருக்கடிக்கு உள்ளாகும். இதனை கருத்திற்கொண்டு எரிபொருள் மீதான வரியை குறைக்குமாறு அல்லது எரிபொருள் விலை அதிகரிப்பை துரிதப்படுத்துமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.