
கொழும்பு, பெப்.16:
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 20ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திபால சிறிசேன யாழ் மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.