
புத்தளம், பெப்.16:
க.பொ.த உயர்தரப்பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதிய பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் புனித மரியாள் தமிழ் வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் வைத்து ஆள் மாறாட்டம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் பிக்கு செவ்வாய்க்கிழமை புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நான்காவது நாளாக தொடர்ந்து க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில் சிங்கள மொழி பரீட்சையின் இரண்டாம் பகுதிக்காக தோற்றிய இந்த பிக்கு மீது பரீட்சை மேற்பார்வையாளர் சந்தேகம் ஏற்பட்டு விசாரணை நடத்தியுள்ளார். பின்னர் இவர் பரீட்சை மண்டப மேற்பார்வையாளரால் புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பெலியத்த, இசுருபுர பிரதேசத்திலுள்ள விகாரையின் பிக்கு ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். சந்தேக நபரான பிக்குவை புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.