
கொழும்பு, பெப் 16: மருத்துவமனை, மருத்துவமனை அல்லாத இறப்புகளுக்கு கொரோனா பரிசோதனை அவசியமில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ‘மருத்துவமனை, மருத்துவமனை அல்லாத இறப்புகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை. சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி விரும்பினால் மட்டும், பிரேத பரிசோதனை நடத்தலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.