யாழில் இந்து திருமண நிகழ்வில் பௌத்த துறவி!

யாழில் இடம்பெற்ற இந்து திருமண நிகழ்வில் பௌத்த துறவி ஒருவர் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பௌத்த துறவியான இந்தரதன தேரரே இவ்வாறு திருமண நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். நாட்டில் உள்ள தேரர்கள் பலர் இனவாதத்தை பரப்பிவரும் நிலையில் இந்தரதன தேரரின் இந்த செயலானது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

அதோடு திருமணவீட்டில் இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி தேரர் மணமகனுக்கு பால் அறுகும் வைத்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்களை தனது முகநூலில் பதிவிட்டுள்ள தேரர், நல்லவர் கெட்டவர்களால் மட்டுமே மக்கள் வேறுபடுத்தப்பட வேண்டும் வேறு எந்த பிரிவும் தேவையில்லை எனவும் பதிவிட்டுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *