சர்வஜன நீதி அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கருகில் இந்த போராட்டம் நேற்று (15) ஆரம்பிக்கப்பட்டது. அந்த அமைப்பின் இணைப்பாளரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இன்று (16) காலை யாழ். பிரதான பஸ் நிலையம் முன்பாகவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
