
1989 ஆண்டு இந்தியாவை வெளியே போ என்று கூறிய இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசவால் இன்று தமிழ் மக்களின் கோரிக்கைக்கு எந்தளவுக்கு இந்தியா தலை சாய்க்கும் என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற தமிழ் கட்சிகளின் ஒருங்கிணைந்த கருத்தாடல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நாட்டில் தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அதற்கு தீர்வு தீர்வு என்று கூறி களைத்து விட்டோம். ஆகவே இதற்கு ஒரே ஒரு தீர்வு தான். ஈழத்தமிழர்களும், சர்வதேசமும் இணைந்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
நாம் கடந்த காலத்தை மறந்து, சிறப்பாக வழி நடத்தக் கூடிய தலைவர்கள் உருவாக வேண்டும். ஜப்பான் மீது அமெரிக்க வீசிய குண்டு காரணமாக அன்று ஜப்பான் நிலை குலைந்தது. அதற்காக ஜப்பான் மீண்டு எழவில்லையாக, பின்னர் அமெரிக்காவுடன் சிறப்பான உறவை பேணவில்லையா? இதை எல்லாம் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
1989 ஆம் ஆண்டு நாட்டின் ஜனாதிபதி, பிரேமதாசா இந்திய படைகளை, வெளியேற்றினார். அப்போது நாம் இந்தியாவை பகைத்து விட்டோம். இப்போது தமிழ் கட்சிகள் சேர்ந்து 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இது எந்தளவுக்கு இந்தியா எம்மை கருத்தில் கொள்ளும் என்று தெரியவில்லை. ஆகவே கடந்த கால கசப்புகளை மனதில் இருந்து, அடுத்த கட்ட நகர்வை சரியாக மேற்கொள்ள வேண்டும். கட்பூசல்கள் மக்களுக்கு தீர்வைத் தராது. – என்றார்.