திருகோணமலை – கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நடுவூற்று கிராமத்தையும் சுங்கான் குழி கிராமத்தையும் இணைக்கும் பாலமானது உடைந்து சேதமாகியுள்ளதுடன், போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் அசொகரியங்களை எதிர் நோக்குவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக பெய்த அடை மழை காரணமாக வெள்ளப்பெருக்கினால் நீர் உடைப்பெடுத்துள்ளதனால் குறித்த பாலம் உடைந்துள்ளது.
இப் பாலம் ஊடாக நாளாந்தம் பலர் பயணிக்கின்றனர். விவசாயிகள் உட்பட இவ் வீதியைத்தான் பயன்படுத்துகின்ற அதே நேரம் இவ் பாலம் ஊடாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இப் பாலத்தை புனரமைத்து தருமாறு உரிய அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
