திருகோணமலை மாவட்டம் சேருவில, ஆதியம்மன்கேணி லிங்கபுரத்தை சேர்ந்த விஜயராணி என்பவரின் வீடு, பயன்தரும் மரங்கள் என்பவற்றை காட்டு யானை இன்று அதிகாலை சேதப்படுத்தியுள்ளது.
குறித்த வீட்டில் இருந்தவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
இப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் தினமும் அச்சத்தினுடனேயே வாழ்கின்றனர். இப் பகுதியிலுள்ள விவசாய நிலங்களையும் யானைகள் சேதப்படுத்தி வருகின்றன.
இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் ஏன் கவனம் எடுக்கவில்லை என மக்கள் கேள்வி எமுப்புகின்றனர்.

