
குருநாகல் – வில்பாவ வாவியில் குளிப்பதற்காக சென்ற சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 13, 14 வயதுடைய சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்தனர்.
நான்கு சிறுமிகள் இணைந்து குளித்துக்கொண்டிருந்த போது அவர்கள் நால்வரும் நீரில் மூழ்கியுள்ள நிலையில், பிரதேசவாசிகளின் முயற்சியல் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.