
ஜெர்மனி, பெப்.16
ஜெர்மனியில் மத்திய மாகாணமான பவேரியாவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
எபென்ஹவுசென்-ஷ்லோபட்லார்ன் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் எதிர்திசையில் மற்றொரு பயணிகள் ரயில் வந்தது. அப்போது 2 ரயில்களும் நேருக்கு நேர் மோதியுள்ளன.
இந்த கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.