
மட்டக்களப்பு – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் சமையல் எரிவாயு அடுப்பொன்று இன்று வெடித்துள்ளது.
குறித்த வெடிப்பு சம்பவம் பிரதேச செயலக முன்வீதி அக்கரைப்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் ‘சமையலில் ஈடுபட்டிருந்தபோது திடீரென சத்தமொன்று உருவானதாகவும் இதன் பின்னர் குறித்த அடுப்பின் மேற்புற கண்ணாடி உடைந்து செல்வதையும் அவதானித்தேன் என சமையலில் ஈடுபட்ட பெண்’ தெரிவித்தார்.
மேலும் இச்சம்பவத்தால் வேறு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.