
கொழும்பு, பெப் 16: இரு சிறுமிகள் குருநாகல் வில்பவ வாவியில் மூழ்கி 13,14 வயதுடைய இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸ் மூத்த அதிகாரி கூறுகையில் ” குருநாகல் வில்பவ வாவிக்கு நான்கு சிறுமிகள் நீராடச் சென்றுள்ளனர். இவர்கள் நால்வரும், நீரில் மூழ்கியுள்ளனர். இவர்களை பிரதேசவாசிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இவர்களில், இருவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆபத்தான நிலையில் உள்ள மற்றைய இரண்டு சிறுமிகளும், குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.