
கொழும்பு, பெப் 16: ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற கையோடு அன்று தொழிற்துறை ஆராய்ச்சி அமைச்சராக இருந்த கணபதி காங்கேசர் பொன்னம்பலம் (ஜீ.ஜீ.பொன்னம்பலம்) எமது மீனவர்களுக்குச் செய்த அநியாயம் இன்றுவரை பரம்பரை பரம்பரையாக நீள்கிறது என்று சமூக ஆர்வலர் தமயந்தி சைமன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பது:
வடக்கு மீனவர்களின் பிரச்சனைகளையும், போராட்டங்களையும் யாழ்ப்பாணத்துத் தமிழ் கட்சிகள்
திட்டமிட்டுத் திசை திருப்பிக் கொண்டிருக்கின்றன. இந்திய இழுவைப் படகுகளின் பிரச்சனைகள் ஏதோ இப்போது புதிதாக முளைத்ததல்ல. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபோதே மிக உக்கிரமாக இருந்தது. அப்போதெல்லாம் இந்த கட்சிகள் வாயை மூடிக் கொண்டிருந்தன.
இப்போ, மீனவர்களின் சுயாதீனமான உரிமைப் போராட்டத்தை தமது சுய லாபங்களுக்காக மடை மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
கடற்தொழில் அமைச்சரோடு தங்களுக்கு இருக்கும் பங்காளிப் பிரச்சனைகளை மனதில் வைத்து,
எமது மீனவர்களின் வாழ்வாதாரப் போராட்டத்துக்குள் வந்து தமது கணக்கைத் தீர்க்கிறார்கள்.
ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற கையோடு அன்று தொழிற்துறை ஆராய்ச்சி அமைச்சராக இருந்த கணபதி காங்கேசர் பொன்னம்பலம் (ஜீ.ஜீ.பொன்னம்பலம்) எங்கள் மீனவர்களுக்குச் செய்த அநியாயம் இன்றுவரை பரம்பரை பரம்பரையாக நீள்கிறது.
சுமந்திரன் சாணக்கியன் என சிலபேர் முல்லைத்தீவிலயிருந்து காங்கேசன் துறை வரை கடற்சுற்றுலாப் போனார்களே? எங்கே அவர்கள்?
நீங்கள் என்ன திருகுதாளமாவது போட்டு அரசியல் நடத்துங்கள். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்