
யாழ்.பெப்.16:
யாழ்ப்பாணம் – அராலி தெற்கில் வீடொன்றில் புகுந்த திருடர்கள் சுமார் ரூ. 15 லட்சம் பெறுமதியான நகைகளை திருடி சென்றுள்ளனர்.
வீட்டில் வசிப்போர் தமது உறவினர் வீடொன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது , வீட்டின் கதவுகள் திறந்து இருப்பதனை அவதானித்து வீட்டினுள் சென்று பார்த்த போது , வீட்டினுள் பொருட்கள் சிதறி கிடந்துள்ளதுடன், நகைகள் வைக்கப்பட்டு இருந்த அலுமாரியில் இருந்த பொருட்களும் சிதறி காணப்பட்டன.
அலுமாரிக்குள் வைக்கப்பட்டு இருந்த 11 பவுண் தாலிக்கொடி மற்றும் ஒன்றரை பவுண் சங்கிலி என்பன களவாடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.