இலங்கையின் முன்னணி நிறுவன அமைப்பான பூமணி அம்மா அறக்கட்டளையின் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னணி தன்னார்வு தொண்டு,நிறுவனமாகவும் அரச சார்பற்ற (NGO) அமைப்புமான பூமணி அம்மா அறக்கட்டளை இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த திறப்பு விழா , யாழ்ப்பாணம் – கொட்டடி, சிவன் பண்ணை வீதியில் அறக்கட்டளைக்கான பொது மக்கள் தொடர்பக பணிமனையில் நடைபெற்றுள்ளது.
இலங்கை முழுவதும் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகின்ற குறித்த அமைப்பானது, கடந்த 15ம் திகதி தொடக்கம் தனது சமூக பணிகளை முன்னெடுத்துள்ளன.
குறித்த அமைப்பின் ஸ்தாபக தலைவரும், பிரான்ஸ் நாட்டில் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் (ITR)பணிப்பாளராகவும் விளங்கும் விசுவாசம் செல்வராசாவின் வழிகாட்டலில் குறித்த விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த திறப்பு விழா நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் J.X.செல்வநாயகமும், சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டின் பிரபல தொழிலதிபர் T.சந்திரகுமாரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், கௌரவ விருந்தினராக மண்டைதீவு, அல்லைப்பிட்டி பங்குத் தந்தையும் தீவக மறைக் கோட்ட குரு முதல்வரும்,தீவகப் பகுதி சிவில் சமூக அமைப்புக்களின் முக்கியஸ்தருமான அருட்பணி மனுவேற்ப்பிள்ளை டேவிட் அடிகளாரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
அத்துடன், விருந்தினர்கள், அலுவலக பெயர் பலகையினை திரை நீக்கம் செய்து,அலுவலகத்தினை நாடாவை வெட்டி
திறந்து வைத்ததுடன் விருந்தினர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றது.
கௌரவ விருந்தினர் வரிசையில் திருகோணமலை மற்றும் லண்டனை சேர்ந்த சிறந்த சமூக சேவையாளர் கந்தசாமி லிங்கராசா (சிங்கன்) கலந்து சிறப்பித்தார்.
வரவேற்புரையினை அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளர் N.விந்தன் கனகரட்ணமும் நன்றியுரையினை அறக்கட்டளைக்கான கல்விப் பிரிவு பொறுப்பாளர் அதிபர் க.சசிதரன் ஆகியோர் நிகழ்த்தியுள்ளனர்.
இன்றைய நிகழ்வுக்கு ஒருங்கிணைப்பாளர்களாகவும் நிகழ்ச்சித்திட்ட ஏற்பாட்டாளர்களாகவும் அழைப்பாளர்களாகவும் V.A.நாதன் இயக்குநர் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்(ITR),யுகம் வானொலி கனடா,பூமணி அம்மா அறக்கட்டளையின் தீவிர செயற்பாட்டாளர்களான ராதா கிருஷ்ணன் ரொறண்டோ கனடா,மோகனதாஸ் மோகன் மொன்றியல் கனடா,ராஜன் சிவலோகநாதன் மொன்றியல் கனடா ஆகியோரின் அனுசரணையுடன்,
அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளான தலைவர் நா.தனேந்திரன், செயலாளர் N.விந்தன் கனகரட்ணம்,பொருளாளர் S.கீர்த்தனா,கல்விப் பிரிவு பொறுப்பாளர் அதிபர்,K.சசிதரன்,உப தலைவர், Dr S.செளந்தரராஜன்,உப செயலாளர்,Dr இ.சற்குருநாதன்,இணைப்பாளர் T.யோசேப்,ஆலோசகர்,இ.மயில்வாகனம்,நிர்வாக சபை உறுப்பினர்களான Dr H.சத்தியா,Dr.M.நிர்மலா,றமணதாஸன்,
இவர்கள் உட்பட பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள் மாணவர்கள்,பெற்றோர்கள்,பொது மக்கள்,அருட் சகோதரிகள்,சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர்.
இன்றைய நிகழ்வில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன்.நிகழ்வுகள் யாவும் இலங்கை நிர்வாகத்தின் தலைவர் நா.தனேந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




