
கொழும்பு, பெப் 16:இந்தியா மொத்தம் 100,000 ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் கருவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் இந்த கருவிகள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நன்கொடைக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட அமைச்சர் ரம்புக்வெல்ல, இது போன்ற சமயங்களில் நட்பு நாடுகளின் நட்பு இன்றியமையாதது என்றார்.
இந்த நன்கொடைக்கு இலங்கை மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.