
குவைத் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ், 66 பாலங்களை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குவைத் அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ், ஏழு மாகாணங்களில் 66 பாலங்களை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் பாலங்கள் புனரமைக்கப்படவுள்ளன.
பாலங்களின் அபிவிருத்திப் பணிகளை மூன்று வருடங்களில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பழைய பாலங்களுக்குப் பதிலாக புதிய பாலங்களை நிர்மாணிப்பதும் குறுகிய பாலங்களை அகலப்படுத்தி சீரமைப்பதும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு மக்களின் பயண நேரத்தையும் குறைக்கும்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டால்கூட தடையின்றி நாடு முழுவதும் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதற்கும் தற்காலிக பாலங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.