நாட்டில் இடம்பெற்ற போர் படுகொலை அல்ல! – மொரகொல்லாகம உபரதன தேரர்

நாட்டில் இடம்பெற்ற போர் படுகொலை அல்ல. மக்களை பாதுகாத்து மனிதாபிமான அடிப்படையில்தான் போர் நடத்தப்பட்டது என இலங்கையின் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் முதுகலை கற்கைநெறி பீடாதிபதி பேராசிரியர் வணக்கத்திற்குரிய மொரகொல்லாகம உபரதன தேரர் தெரிவித்துள்ளார்.

‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேசத் தொடரின் 219 ஆவது தர்ம உபதேசம் இன்று (புதன்கிழமை) அலரி மாளிகையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் தர்ம உபதேசம் நிகழ்த்துவதற்காக வருகைத்தந்த பீடாதிபதி பேராசிரியர் வணக்கத்திற்குரிய மொரகொல்லாகம உபரதன தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,

‘முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் மாபெரும் யுத்தம் நடைபெற்றது.
அப்போதைய ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருடன் நாட்டின் சகல இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இந்த நாட்டின் அனைத்து மக்களின் ஆசியுடன் மாபெரும் யுத்தம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மக்களை பாதுகாத்து மனிதாபிமான அடிப்படையில் இந்த போர் நடத்தப்பட்டது. இதனால் இந்த போர் படுகொலை அல்ல.

ஆகையினால்தான் நாம் அனைவரும் அவர்களை நன்றியுடன் நினைவுகூருகிறோம்.

மேலும் நாட்டு மக்கள் இன்று பௌர்ணமி தினத்தில் சுதந்திரமாக வழிபாட்டில் ஈடுபடுவதற்கும் நாட்டில் பயணிப்பதற்கும் அன்று சிறந்த தலைமைத்துவத்துடன் செயற்பட்ட எமது ஜனாதிபதியினாலேயே ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்றும் அபாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *