இராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் ஒரு அறக்கட்டளை சார்பில் இலங்கையை நோக்கி இந்திய மதிப்பில் ரூ.100 கோடியில் 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இலங்கையை நோக்கி ஆஞ்சநேயர் பார்ப்பது போன்று இந்த சிலை கட்டப்பட்டு வருகிறது. இராமாயணத்தோடு நெருங்கிய தொடர்புடைய தலம்தான் இராமேசுவரம் ராமநாதசாமி திருக்கோவில் ஆகும். காசிக்கு நிகரான புண்ணிய தலமாகவும் விளங்குகிறது.
இந்த பணி கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பூமி பூஜையுடன் தொடங்கியது. தற்போது அஸ்திவார பணி முடிவடைந்து விட்டது. உப்பு காற்றால் சிலை கட்டிட பணிகள் பாதிக்கப்படாத வகையில்
இரசாயனம் கலந்த சீமெந்து கலவை மூலமும், அதற்கு ஏற்ற கற்கள் பயன்படுத்தியும் ஆஞ்சநேயர் சிலை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இலங்கையை நோக்கி ஆஞ்சநேயர் பார்ப்பது போன்று இந்த சிலை கட்டப்பட்டு வருகிறது.
தற்போது 16 அடி உயரத்தில் அத்திவார பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டன. இன்னும் 6 மாதத்திற்குள் மற்றைய பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டு வரும் இடத்தின் அருகில் சிவ ஆன்மிக அடியார்கள் திருக்கூட்டம் சார்பில் 51 அடி உயரத்தில் நடராஜர் சிலை கட்டும் பணி நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.