
கொழும்பு, பெப்.17
சுவிட்சர்லாந்தில் இருந்து தமிழ் இளைஞர் ஒருவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் நிட்வால்டன் மாநிலத்தின் அகதித் தஞ்சம் கோரி வசித்து வந்தவரே இரகசியமான முறையில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஸ்ரன்சில் வசித்துவந்த குறித்த இளைஞர், அகதி அந்தஸ்த்து கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவருடைய சம்மதமின்றி வலுக்கட்டாயமாக திருப்பியனுப்பப்பட்டதாக இளைஞரின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் அகதி அந்தஸ்த்து பெற அதிகாரிகளை சந்திக்க சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டதுடன், உறவினர்களை சந்திக்க விடவில்லை எனவும் தெரியவருகின்றது.