
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவர், பெருமளவு ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கொழும்பிலிருந்து யாழிற்கு பேருந்து மூலம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்துள்ளார்.
இதை தொடர்ந்து, யாழில் உள்ளூர் தரகர்கள் மூலம் பல நாட்களாக விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
குறித்த பெண் தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிற்கு இரகசிய தகவல் கசியத்தொடங்கியுள்ளது.
இதை அடுத்து குறித்த பெண்னை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் யாழில் தரகர்கள் மூலம் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த , குறித்த பெண் நேற்றைய தினம் அரியாலை பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்படும் வேளை பெண்ணிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தூய ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இதன் பெறுமதி 5 தொடக்கம் 6 லட்சம் எனவும், கைது செய்யப்பட்ட பெண் 33 வயதுடைய அரியாலை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.